ஊட்டியின் முக்கிய குடிநீர் ஆதாரமான மார்லிமந்து அணையில் 1 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட இருக்கின்றது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகருக்கு தண்ணீர் தருகின்ற மூன்றாவது முக்கிய குடிநீர் ஆதாரமாக மார்லிமந்து அணை இருக்கின்றது. இந்த அணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணையின் தடுப்பு சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகி வருகின்றது. மேலும் தூர்வாரப்படாமல் இருப்பதால் அதிக தண்ணீரை சேர்த்து வைக்க முடியவில்லை.
பொதுமக்களுக்கு சுத்திகரிப்பு நிலையம் இல்லாத காரணத்தால் மாசடைந்த நீரே விநியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் அணையில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கோடி செலவில் தடுப்பு சுவர்களை சீரமைத்து புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கின்றது. அணைக்கு வரும் அனைத்து நீரோடைகள் மற்றும் கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டு இருக்கின்றது.