இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் மக்கள் யாரும் தனிப்பட்ட தகவல்களை யாரிடமும் பகிரக்கூடாது என அரசு தரப்பில் இருந்தும் பல வங்கிகள் தரப்பில் இருந்தும் பல்வேறு அறிவுறுத்தல்கள் மக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் தினந்தோறும் புதுவிதமான மோசடி சம்பவங்கள் அரங்கேரி கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் மின்கட்டணம் தொடர்பான குறுஞ்செய்தி மூலம் தற்போது மோசடி நடைபெறுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் கட்டிய உங்கள் வீட்டு மின்சார கட்டணம் இன்னும் சிஸ்டத்தில் அப்டேட் ஆகவில்லை. நாங்கள் சொல்கிற ஆப் டவுன்லோட் செய்து அதில் பேமெண்ட் கட்டினால் உடனே அப்டேட் ஆகிவிடும்.
இல்லையென்றால் இன்றே உங்கள் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படும் என உங்களுக்கு போன் வரலாம். இதனை யாரும் நம்ப வேண்டாம். உங்கள் வாடிக்கையாளர் எண் மற்றும் கட்ட வேண்டிய தொகை என எல்லாவற்றையும் மிக சரியாக சொல்வார்கள். இதை நம்பி யாரும் பணத்தை இழக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.