தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்யாமேனன். இவர் அனுமான் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு மலையாள சினிமாவில் ஹீரோயின் ஆக நடித்து வந்த நித்யா மேனன், தமிழில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் நடித்த காஞ்சனா, மெர்சல் மற்றும் திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. பான் இந்தியா ஸ்டார் ஆக திகழும் நித்யா மேனன் தற்போது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்துள்ளார்.
அதாவது பிரக்னன்சி பாசிட்டிவ் கிட்டை அவர் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் திருமணம் ஆகாமல் குழந்தையா? என்று கமெண்ட் செய்து வருவதோடு நித்யா மேனனுக்கு, வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதேபோன்று நடிகை பார்வதி மற்றும் நடிகை சயனோராவும் தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் பிரக்னன்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பிய நிலையில், தற்போது உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது.
அதாவது அஞ்சலி மேனன் மலையாள சினிமாவில் வொண்டர் வுமன் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகைகள் நித்யா மேனன், பார்வதி, நதியா, சயனோரா, பத்மபிரியா மற்றும் அர்ச்சனா பிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இவர்கள் படத்தில் கர்ப்பிணிகளாக நடிக்கின்றார்கள். மேலும் இந்த படத்தின் ப்ரோமோஷன்காக தான் பிரக்னன்சி கிட் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.