கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகாலையில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்த காருக்குள் இருந்த மூபின் என்பவர் உடல் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கார் விபத்தில் உயிரிழந்த முபின் வீட்டில் இருந்து 76 கிலோவுக்கு மேல் ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை சம்பவம் பெரிதாக பீதியை கிளப்பியிருக்கும் நிலையில் இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்திருந்தார் . இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேசா முபின் வீட்டிலிருந்து ஜிகாத் வரிகள் கொண்ட நோட்டுகள் உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏவின் FIRல் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முபின் வீட்டில் பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடர் இருந்ததாகவும், அவை வெடிகுண்டு, வெடிபொருட்கள் தயாரிக்க பயன்படுபவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.