அண்ணாமலை செய்தியாளர் சந்தித்து பேசியபோது அவரிடம், கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உங்களிடம் சில ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்ததற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டனம் தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரிக்க வேண்டிய நபர் நீங்கள் தான் என்று கூறி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க மறுத்த அண்ணாமலை, ஊர்ல இருக்கிற நாய், பேய், சாராயம் விற்கிறவனுக்கு எல்லாம் நான் பதில் சொல்லனுமா?. மரத்தின் மீது குரங்கு தாவுவதை போல ஏன் சுற்றி சுற்றி வருகிறீர்கள் என்று ஒருமையில் பேசி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இது அங்கிருந்த பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி வைத்துள்ள குற்றச்சாட்டுக்கு எதிர்வினையாற்றாமல் கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை குரங்குடன் ஒப்பிட்டு பேசிய அண்ணாமலைக்கு ஊடகத்துறையினரும், அரசியல் தலைவர்களும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சாத்தான்குளத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கனிமொழி எம்பி நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய அண்ணாமலை பேச்சு குறித்து கேட்டபோது எம்பி கனிமொழி இது வருந்ததக்க செயல். இவ்வாறு ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் பேசக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.