Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் மீண்டும் நேரடி இலவச டோக்கன்…. எப்போது தெரியுமா …? பக்தர்களே தெரிஞ்சுக்கோங்க….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  கடந்த ஏப்ரலில் நிறுத்தப்பட்டிருந்த நேரடி இலவச தரிசன டோக்கன்கள், மீண்டும் நவம்பர் 1 முதல் வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சனி, ஞாயிறு, திங்கள், புதன்கிழமைகளில் 25,000ம், மற்ற நாட்களில் 15,000 டோக்கன்களும் வினியோகிக்கப்பட உள்ளது. டோக்கன் கிடைக்காதவர்கள் திருமலை காத்திருப்பு அறை 2 வழியாக தரிசனம் பெறலாம். டிசம்பர் 1 முதல் விஐபி தரிசன நேரம் காலை 8 மணிக்கு மாற்றப்படுகிறது.

Categories

Tech |