விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி 2 வது சீசனில் கலந்து கொண்டதன் மூலம் அஸ்வின் பிரபலமானார். இந்நிகழ்ச்சிக்கு முன்பு சிங்கிள் டிராக்குகள், குறும்படங்கள் நடித்து வந்த அஸ்வினுக்கு இந்நிகழ்ச்சிக்கு பிறகு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. அதுமட்டுமில்லாமல் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகிய ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தில் அஸ்வின் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் அஸ்வின் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கோவை சரளா, தம்பி ராமையா, யுவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அஸ்வின், படம் பண்ணுவதை ரொம்ப பாக்கியம். பிரபு சாலமன் சார் இந்த படத்தை இயக்குகிறார் என்று சொன்னதுமே நான் படத்திற்கு ஓகே சொல்லிவிட்டேன். இதற்காக தயாரிப்பாளர் ரவி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதல் படமும் எனக்காக அவர் பார்த்து பண்ணியிருக்கிறார். அதனைதொடர்ந்து இந்த கதை உங்களுக்கு ஓகேவா சார் என்று கேட்டேன். ஏனென்றால் இந்த படத்தில் ஷூட்டிங் போகும்போது எனது டிராவல் ரொம்ப மோசமாக இருந்தது. அப்போ நிறைய பேரு எனக்கு…. என்று உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின் பின்னர் கண் கலங்கியப்படி தேங்க்யூ ஆல். எல்லோரும் இங்கு வந்ததற்கு நன்றி. கமல் சார் பக்கத்தில் இருப்பதை பெருமை. அவர் வந்து வாழ்த்தியது மிகப்பெரிய பெருமை. படத்திற்கு ஆதரவு தாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.