டெல்லியில் இருந்து பெங்களூருக்கு சென்ற இண்டிகோ விமானம் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் இறக்கை திடீரென தீப்பிடித்து எறிந்ததால் டெல்லி விமான நிலையத்திலேயே விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தின் எஞ்சினில் உள்ள ஒரு பகுதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டு 177 பயணிகள் மற்றும் 7 பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் கூறியுள்ளது. இந்த சூழலில் விமானத்தின் எஞ்சினில் தீ விபத்துக்கள் ஏற்பட்டதற்கான காரணத்தை கண்டறிய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது.