தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, எனக்கு முன்பு பேசிய வினோத் பி.செல்வம் அவர்கள் சொன்னது போல, மழை நிறைய வந்தாச்சு, மழைநீர் சாக்கடை கழிவு வாட்டர் மேலே வந்துருச்சு, டிரைனேஜ் வேலை முடியல என்று திமுகவினுடைய அமைச்சர் பேசுகின்ற அளவிற்கு இன்று தமிழனுடைய நிலையை தரம் தாழ்த்த வைத்திருக்கின்றார்கள். இதற்கு இன்னும் நாம் பின்னாடி போக வேண்டும்… எதற்காக இந்த போராட்டம் தேவைப்படுகிறது ? திமுகவினுடைய சதி எங்கே ஆரம்பித்தது ? என்று பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
1950இல் நம்முடைய அரசியல் அமைப்பு சட்டம் வந்தபோது, இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலம் கூட ஒருவருக்கொருவர் எவ்வாறு பேச வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டத்தில் இருந்தது. அப்போது சொன்னோம்… அரசியலமைப்பு சட்டத்தில் 15 ஆண்டுகள் இது ஆங்கிலமாக இருக்கும், 15 ஆண்டுகள் முடிந்த பின்பு இது ஹிந்தியாக மாறும் என்று 1950ல் அரசமைப்பு சட்டத்தில் இருந்தது.
அப்போது இந்த போராட்டம் வெடித்த போது குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் இல்லை எங்களுக்கு ஹிந்தி வேண்டாம்.. எங்களுக்கு தொடர்ந்து ஆங்கிலம் இருக்க வேண்டும் என்ற ஒரு கொள்கை வைத்த போது, 1960-இல் அப்போது இருந்த நேரு அவர்கள், ஒத்துக் கொள்கின்றேன். அனைத்து மாநிலங்களும் விருப்பப்படும் வரை ஆங்கிலமும், ஹிந்தியும் தொடர்பு இருக்கும்… யாரும் அச்சப்பட வேண்டாம் என்று 1960-இல் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வரவேண்டும், காங்கிரசை ஓரம் கட்ட வேண்டும். அந்த இடத்தை திமுக எடுக்க வேண்டும். அதற்கு திமுக திட்டம் போட்டு கண்டுபிடித்து தான் ஹிந்தி எதிர்ப்பு என்கின்ற வாசகம். ஹிந்தி என்பதை யாரும் திணிக்கவில்லை, மாற்றுக் கட்சியில் இருந்தாலும் கூட, பண்டிதர் ஜவகர்லால் நேரு 1960-இல் உறுதிமொழி கொடுத்தார் ஹிந்தி வராது என்று… அப்படி இருந்தும் 1965-இல் திமுகவிற்கு மிக நன்றாக தெரியும். இதை வைத்து அரசியல் செய்து தான் நாம் ஆட்சிக்கு வர முடியும் என்று கூறி அப்போது இருந்து இப்போது வரை திமுக ஹிந்தியை வைத்து அரசியல் செய்கின்றது என திமுகவை விமர்சனம் செய்தார்.