மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீட்டை முற்றுகையிட முயன்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி அமைச்சர் செல்லூர் ராஜுவின் வீட்டை முற்றுகையிட மாணவர் அவை திட்டமிட்டதாக தெரிகிறது. இதனால் பழனிபாபா மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த இருவரை காவல்துறையினர் முன்கூட்டியே கைது செய்தனர். இதைத் தொடர்ந்து முழக்கம் எழுப்பியவாறு செல்லூர் ராஜுவின் வீட்டின் அருகே செல்ல முயன்ற மேலும் 4 பேரை கைது செய்தனர். அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.