ஓடும் வேனில் ஏறும் போது தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் பழனி பாலாறு-பெருந்தலாறு அணை பகுதியில் தனியார் நிறுவனத்தின் குறும்பட படப்பிடிப்பு நடைபெற்றதால் ரமேஷ் தனது நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளான்.
இந்நிலையில் பாலசமுத்திரம் சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த வேனில் ரமேஷ் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகாயமடைந்த ரமேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.