அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நகரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான டையிங் தொழிற்சாலை அமைந்துள்ளது. நீண்ட காலமாக செயல்படாமல் இருக்கும் தொழிற்சாலையில் உள்ள காலி இடத்திலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 45 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சியடைந்தனர்.
இதனை அடுத்து போலீசார் அந்த பெண்ணின் உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? யாரேனும் கொலை செய்து சடலத்தை வீசி சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.