திருவள்ளூர் அருகே மாதவரம் ரவுண்டானா பகுதியில் ரசாயனக் கிடங்கில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 15 தீயணைப்பு வாகனங்கள், 20 மெட்ரோ தண்ணீர் லாரிகள் உதவியுடன் சுமார் 3 மணி நேரமாக தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
மருந்து தயாரிப்பதற்கான ரசாயன பொருட்கள் வெடித்து சிதறுவதால் தீயை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 8 இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
தீ விபத்தால் அதிகளவு கரும்புகை வெளியேறுவதால் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்பு வாசிகள் புகார் அளித்துள்ளனர். புகையால் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஆம்புலனஸ்கள் தயார் நிலையில் உள்ளன. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் ஆணையர் ஏ.கே . விஸ்வநாதன் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.