தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் திருச்செந்தூரில் தற்போது கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. மேலும் நாளை தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நமது மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மதுபான கடைகளும், மதுபான கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் மதுபான விற்பனை, மது பானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது தெரிய வந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.