தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். தற்போது இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனிடையே சமீப காலமாக சமந்தாவிற்கு முகத்தில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும் அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொள்ள அவர் அமெரிக்கா சென்று திரும்பியதாகவும் ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் சமந்தா தரப்பிலிருந்து எந்த ஊரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேசமயம் சமந்தா சமீப காலமாக எந்த ஒரு புகைப்படமும் வெளியிடாத நிலையில் ரசிகர்கள் இதனை உறுதி செய்துள்ளனர்.
இந்நிலையில் சமந்தாவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாகவும் அவருக்கு மயோ சிடிஸ் என்ற நோய் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தசைகள் தளர்ந்து, கீழே விழுந்தால் எழ முடியாத நிலை இந்த நோயின் அறிகுறிகள் எனவும் கூறப்படுகிறது. சற்றுமுன் இந்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.