Categories
மாநில செய்திகள்

நேப்பியர் பாலம் – லைட் ஹவுஸ் வரை….. சென்னையில் வரப்போகும் பிரமாண்டம்….. மேயர் சொன்ன குட் நியூஸ்….!!!!

நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டத்தை நடைமுறைப்படுத்த கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் ரிப்பன் வளாக கட்டிடத்தில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர் ஒருவர் நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் இடையே ரோப் கார் திட்டத்தை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்று ஆலோசனை கூறினார். இதற்கு தொடர்ந்து பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, இது ஒரு நல்ல திட்டம். எனவே கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் வாங்கிய பிறகு மாநகராட்சி சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |