Categories
சினிமா தமிழ் சினிமா

பிகினியில் தீபாவளி கொண்டாடிய இலியானா… “இந்த தீபாவளி சிறந்த ஒளியால் என்னை சூழ்ந்தது”… இணையத்தில் பதிவு….!!!!

நடிகை இலியானா தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை இலியானா. இதை தொடர்ந்து இவர் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘நண்பன்’ திரைபடத்தில் நடித்ததன் மூலம் பிரபல நடிகையானார்.அதன்பின் தமிழில் படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த இலியானா தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை இலியானா அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் வெளியிட்டு வருகிறார்.

தோழியருடன் 'பிகினி'யில் தீபாவளி கொண்டாடிய இலியானா Entertainment பொழுதுபோக்கு

அந்த வகையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுத்த சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கின்றார். அவரின் பாலிவுட் நண்பர்களான நடிகர் விஹான் சமத், அன்யா சிங், கரிஷ்மா மற்றும் தனது சகோதரியுடன் கலந்து கொண்டார். பிகினியில் தோழியர்களுடன் கொண்டாடிய புகைப்படங்களை தனது பதிவில் வெளியிட்டு இருக்கின்றார். அந்த பதிவில் இந்த தீபாவளி சிறந்த வகையான ஒளியால் என்னை சூழ்ந்தது. அதை ஆசீர்வதிக்கப்பட்டது என்று தைரியமாக சொல்வேன் என குறிப்பிட்டிருக்கின்றார்.

Categories

Tech |