Categories
தேசிய செய்திகள்

ஐடி விதிகளில் திருத்தம் பற்றிய அறிவிப்பு… “இதுவே அரசின் நோக்கம்”…? மத்திய மந்திரி விளக்கம்…!!!!!

சமூக ஊடக நிறுவனங்களுக்கு பொருந்தும் தகவல் தொழில்நுட்ப விதிகளில் திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இந்தியாவில் சமூக ஊடகங்கள் மீது அதிகரித்து வரும் பயணர்களின் புகாரை ஆய்வுக்குட்படுத்தி தீர்வு காண்பதற்காகவும் மத்திய அரசு குறைகள் மேல்முறையீட்டு குழுவை அமைக்க இருக்கிறது. இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, தகவல் தொழில்நுட்பம் திருத்த விதிகள் 2022 அறிமுகப்படுத்தப்படும் நாளில் இருந்து மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு ஒன்று அல்லது மேற்பட்ட குறைகள் மேல்முறையீட்டு குழுக்களை அமைக்கும் என கூறப்பட்டிருக்கிறது.

அதன்படி twitter உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் இந்திய சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டவை என கூறப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 28 முதல் நடைமுறைக்கு வந்திருக்கின்ற திருத்தப்பட்ட விதிகளின் கீழ் சமூக ஊடக தளங்களின் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும் முடிவுகள் பற்றிய பயனர்களின் புகார்களை கேட்க அரசு குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இதனை அடுத்து சமூக ஊடக நிறுவனங்கள் 24 மணி நேரத்திற்கு பயனர்களிடமிருந்து புகார்களை பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பயனர்களின் புகார்கள் மீது சமூக ஊடகங்கள் எடுத்த நடவடிக்கை திருப்தி தராவிட்டால் அவர்கள் மேல்முறையீடு செய்யும் விதமாக மேல் முறையிட்டு குழுக்களை அமைக்கும் விதிகளை மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மேல்முறையீட்டு குழுக்கள் மூன்று மாதங்களில் அமைக்கப்படும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறியுள்ளது. இந்த நிலையில் இது பற்றி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை மந்திரி ராஜூ சந்திரசேகர் என்று பேசும்போது ஐடி சட்ட விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்தது நிறுத்தப்பட்ட விதிகளின்படி இணையத்தில் சட்டவிரோதமான உள்ளடக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் இணையதளத்தை பாதுகாப்பானதாகவும் நம்பகமானதாகவும் மாற்றுவதே அரசின் நோக்கமாகும். வேண்டுமென்றே தவறான தகவல்கள் பகிர்ந்திட இணையம் ஒரு பங்காக இருக்க முடியாது அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையத்தின் நோக்கத்துடன் அனைத்து பெரிய மற்றும் சிறிய வெளிநாட்டு மற்றும் இந்திய நிறுவனங்களுடன் ஒரு கூட்டான்மை மாதிரியில் பணியாற்ற அரசு விரும்புகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |