மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு பகுதியில் அல் அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த அல் அமீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி கேரளாவிற்கு தப்பி சொல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.