பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 36 கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் போன்ற பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 36
நிறுவனம்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
Field Engineer (Electrical) – 14
Field Engineer (Civil) – 06
சம்பளம்: மாதம் ரூ. 30,000 + இதர சலுகைகள்
பணிகள் :
Field Supervisor (Electrical) – 10
Field Supervisor (Civil) – 06
சம்பளம்: மாதம் ரூ. 23,000 + இதர சலுகைகள்
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி., டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 06.03.2020 தேதியின்படி 29 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகை கோரும் பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு லக்னோ மற்றும் அக்ராவில் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.powergridindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: Field Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.400, Field Supervisor பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்துறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.powergridindia.com/sites/default/files/Recruitment_for_the_post_of_FE_%26_FS_in_NR-III_on_Contract_Basis_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2020