Categories
மாநில செய்திகள்

OMG!….அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் விநியோகம்…. மாணவர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி….!!!

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் 200 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு தமிழக சொசைட்டி நிறுவனம் சார்பிவ் முட்டை வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக அரசு பள்ளிகளில் அழுகிய முட்டைகள் விநியோகம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

இதனையடுத்து பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இது குறித்து சத்துணவு பணியாளர்களும் விளக்கம் கேட்டனர். அப்போது பொன்னரகம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு இத்தகைய முட்டைகளை விநியோகம் செய்யப்படுவதாகவும், அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டால் முறையான பதில் கூறவில்லை என்றும் சத்துணவு பணியாளர்கள் தெரிவித்தனர். இதனால் முட்டைகளை மாணவர்களுக்கு வழங்காமல் குழி தோண்டி புதைத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |