தமிழக வேளாண் துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் வேளாண்மை உழவர்-நலத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் அவர்களின் சீரிய தலைமையின் கீழ் வேளாண் பெருமக்களின் உயர்விற்காக பல்வேறு சீரிய முயற்சிகளை வேளாண்மை உளவுத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 79 லட்சம் வேளாண் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதற்காக வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கான தனியாக வேளாண் நிலை அறிக்கை 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை இருமுறை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செம்மையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்ட விவசாய திட்டங்களின் பயன்களை விவசாய பெருமக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்கும் விதமாக தமிழக வேளாண்மை உழவர் நலத் துறையில் உள்ள அலுவலர்கள் மற்றும் கழக பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து திட்ட பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள் எந்தவித தொய்வுமின்றி செயலாக்க வேண்டியதாலும், தொடர் கண்காணிப்பு தேவைப்படுவதாலும் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் உள்ள வேளாண் அதிகாரிகளின் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட ஆணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது வேளாண்மை துறையில் 23 துணை வேளாண்மை இயக்குனர்கள் வேளாண்மை இணை இயக்குனர்களாகவும், 40 வேளாண்மை அலுவலர்கள் வேளாண்மை உதவி இயக்குனர்களாகவும்