Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ….! 3 நாட்களில் மட்டும் இவ்வளவு அபராதமாக….? வாகன ஓட்டிகளே உஷாரா இருங்க….!!!!

தமிழகத்தில் புதிய போக்குவரத்து விதிமுறைகள் கடந்த 26 ஆம் தேதியன்று அமலானது.  உயர்த்தப்பட்ட அபராதம் வசூலிக்கும் பணியானது தமிழக முழுவதுமாக கடந்த 26 ஆம் தேதியன்று தொடங்கியது. இதற்காக சென்னை முழுவதும் முக்கிய சிக்னல்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.  சென்னையில் மட்டும் 2500க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.

அந்த வகையில் சென்னையில் கடந்த 3 நாளாக போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளுக்கு ரூ.42 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 6,187 வழக்குகளைப் போக்குவரத்து போலீசார் பதிவுசெய்துள்ளனர்.

Categories

Tech |