பாமக கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறையில் 6 பேர் 10 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு தற்போது பணி நிரந்தரம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது மற்றும் பாராட்டுக்குரியது.
தமிழக அரசு தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் பணி நிரந்தரம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் 10 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக பணிபுரிபவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். மேலும் தமிழக அரசும் தற்காலிக பணியிடங்களை தவிர்த்து நிரந்தர பணி அமர்த்துவதற்கு முன்வர வேண்டும் என்று குறிப்பிடபட்டுள்ளது.