Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தயாரிப்பாளர் மகனுடன் பிகில் பட நடிகைக்கு திருமணமா…? அவரே சொல்ல விளக்கம் இதோ….!!!

பிகில் மற்றும் 96 திரைப்படத்தில் நடித்துள்ள வர்ஷா பொல்லம்மா தெலுங்கு டைரக்டர்  மகனுடன் காதல். 

தமிழ் சினிமாவில் சப்போர்ட்டிங் நடிகையாக “வெற்றிவேல்” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் தான் வர்ஷா பொல்லம்மா. இதனைத் தொடர்ந்து இவர் “96” திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடனும், “பிகில்” திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடனும் நடித்துள்ளார். கன்னட நடிகையான வர்ஷா பொல்லம்மா தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருக்கின்றார்.

இவர் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும் கூட பல திரைப்படங்களில் சப்போட்டிங் ரோல்கள் அவருக்கு சக்சஸாக அமைந்துள்ளது. இந்நிலையில் நடிகை வர்ஷா பொல்லம்மா பிரபல தெலுங்கு மூவி தயாரிப்பாளர் மகனுடன் காதலில் இருப்பதாகவும், விரைவில் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகை வர்ஷா பொல்லம்மா கூறியதாவது,  “அது முற்றிலும் பொய்யான செய்தியாகும். அந்த மாப்பிள்ளை யார் என்ன? சொல்லுங்க, அப்போது தான் என் குடும்பத்தினரிடம் சொல்ல முடியும்” என்று அவர் கலாய்த்து பேட்டி அளித்துள்ளார்.

Categories

Tech |