விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று ”கனா காணும் காலங்கள்”. பள்ளிக்கதையை மையமாகக் கொண்டு உருவான இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியலில் ராகவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ஹேமா. இந்த சீரியலை தாண்டி, இவர் சித்தி, தென்றல் போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார்.
மேலும் பாட்ஷா, சூரிய வம்சம் போன்ற திரைப்படங்களிலும் இவர் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில், பார்ப்பதற்கு சின்ன பெண் போல் தோன்றும் இவருக்கு திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இவர் தனது மகளுடன் வெளியே சென்ற வீடியோ பதிவை சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.
https://www.instagram.com/reel/CjHrWQ5jfhB/?utm_source=ig_embed&ig_rid=4cc672e3-c8ab-41c0-bd7d-4bcbae40c7da