Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களை போல நானும் தவிக்கேன்….. என் தூக்கத்தை கலைத்தவர் மீது என்ன நடவடிக்கை….? குஷ்பூ நறுக் கேள்வி….!!!!

நடிகை குஷ்பூ குறித்து திமுக பேச்சாளர்களில் ஒருவரான சைதை சாதிக் சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய விதமாக ஆபாசமாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் குஷ்பூ இது குறித்து ட்விட்டரில் தன்னுடைய எதிர்ப்பை பதிவு செய்தார். இந்த பதிவில் குஷ்பூ கனிமொழியை டேக் செய்திருந்தார். இதை பார்த்த கனிமொழி தன்னுடைய twitter பதிவில் ஒரு பெண்ணாகவும் மனிதனாகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.

திமுகவும் பொறுத்துக் கொள்ளாது என்று பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகை குஷ்பூ நன்றி கூறியிருந்தார். இருப்பினும் இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் முதல்வருமான மு.க ஸ்டாலின் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அதிருப்தி ஏற்படுத்தி உள்ளதாக குஷ்பூ தெரிவித்துள்ளார். அதாவது பொது மேடையில் மிகவும் கீழ்த்தரமாக பேசியதை தமிழகமே கேட்டுள்ளது. பேசியவர் மன்னிப்பு கேட்டாயிற்று. எனவே இந்த பிரச்சினை விட்டு விடலாம் என்று திமுகவை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

அவர்களிடம் நான் ஒன்று கேட்கிறேன், உங்கள் குடும்பத்தில் இதுபோன்று ஒருவர் பேசியிருந்தால் சும்மா விட்டு விடுவீர்களா? இந்த சம்பவத்தால் என்னுடைய மனது எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை ஒரு பெண்ணாக பிறந்த ஒவ்வொருவரும் புரிந்து கொள்வார்கள் இதை நான் சாதாரணமாக விடப் போவதில்லை. எனக்கும் 19 மற்றும் 22 வயதில் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன நினைப்பார்கள்? இந்த பிரச்சனையில் நான் பயந்து ஒதுங்கி விடமாட்டேன். விட்டு விடவும் மாட்டேன்.

முதல்வர் காலையில் தூங்கி விழும்போது பயந்து கொண்டு எழும்புவதாகவும், திமுக நிர்வாகிகள் யாரு என்ன பிரச்சனை செய்து வைத்துள்ளார்களோ என்று நினைத்துக் கொண்டு தூக்கமே இல்லாமல் தவிப்பதாகவும் கூறியிருந்தார். இப்போது அவர் நினைத்தது போலவே அவருடைய கட்சிக்காரர் கீழ்த்தரமாக நடந்திருக்கிறார். இதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார்? அவரை ஏன் கட்சியை விட்டு நீக்கவில்லை? நான் முதல்வரிடம் கேட்கும் கேள்வி ஒன்றுதான்.

வேறு எந்த கட்சிக்காரர் ஆவது உங்கள் கட்சியை சேர்ந்த பெண்களை இதுபோன்று பேசியிருந்தால் சும்மா விட்டு விடுவீர்களா.? நான் உங்களுக்கு வாக்களிக்காதவராக கூட இருக்கலாம். ஆனால் உங்கள் மாநிலத்தில் இருக்கும் அத்தனை பெண்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பில் நீங்கள் உள்ளீர்கள். உங்கள் கட்சிக்காரர்களால் உங்களுக்கு தூக்கம் வராமல் இருக்கலாம். இப்போது உங்கள் கட்சிக்காரர்களால் எங்களை போன்ற பெண்களுக்கு தூக்கம் கெட்டுப் போகிறது. இதற்கு பதில் சொல்வது யார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Categories

Tech |