இந்திய ரயில்வே முதல் முறையாக பல போக்குவரத்துகளை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு சரக்குகளை கொண்டு சென்றுள்ளது.
பூடான் நாடு வாங்கிய 75 பயன்பாட்டு வாகனங்கள் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னையில் இருந்து மேற்குவங்க மாநிலம் ஹஸிமரா ரயில் நிலையத்திற்கு ரயில் மூலம் நேற்று கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கிருந்து பூடான் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதாவது சரக்கு ரயில் மற்றும் சாலை போக்குவரத்து என பல வழித்தடங்களை பயன்படுத்தி சரக்குகளை கொண்டு சேர்க்கும் சேவையை இந்திய ரயில்வே முதல் முறையாக மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பூடானுடனான வணிக உறவை மேம்படுத்தும் வகையில் இந்திய ரயில்வே ஹஸிமரா ரயில் நிலையத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த விரும்புவதாகவும், சரக்குகளை வைக்க கிடங்குகள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.