Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேன் ஓட்டுனரின் கவன குறைவு…. அதிர்ஷ்டவசமாக உயர் தப்பிய 15 குழந்தைகள்…. போலீஸ் விசாரணை…!!!

கார் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 15 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இங்கு படிக்கும் குழந்தைகளை 2 வேன்களில் ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் அருகே சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பின்னால் வந்த வேன் ஓட்டுநர் முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த கார் மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியதால் கார் சேதமடைந்தது.

இந்த விபத்தில் வேனில் இருந்த 15 குழந்தைகள், ஆசிரியர், ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனை அடுத்து குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தபோது வாகனத்தை கவனமாக இயக்க வேண்டும் என வேன் ஓட்டுனருக்கு பொதுமக்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதுகுறித்து கார் ஓட்டுனர் லோகேஸ்வரன் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |