மதுரையில் ஏடிஎம் இயந்திரத்தில் 2000 ரூபாய் பொம்மை தாள் வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பசுமலை பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் ஏடிஎம்மில் ரூபாய் 2000 எடுக்க ராஜசேகர் என்பவர் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம்மில் இருந்து சிறுவர்கள் விளையாடக்கூடிய 2000 ரூபாய் பொம்மைதாள் வந்துள்ளது.
இதைப் பார்த்து அதிர்ந்து போன அவர் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டும், அதனை புகைப்படம் எடுத்தும் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். ஏடிஎம் இயந்திரத்தில் ரூபாய் 2000 பொம்மைதாள் வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.