பறவை காய்ச்சல் எதிரொளியால் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கால்நடை துறையினர் கூறியுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகே ஒன்பதாறு சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்பு துறை மூலமாக சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருக்கின்றது. அங்கே கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகின்ற வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றது.
மேலும் கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர் மற்றும் பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்டோர் அடங்கிய குழு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். கோழி மற்றும் முட்டை ஏற்றிக்கொண்டு வருகின்ற வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. மேலும் பறவை காய்ச்சல் எதிரொளியாக உடுமலை சுற்று வட்டார பகுதியில் இருக்கும் கோழிப் பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கின்றது. பண்ணையில் அசாதாரண முறையில் அதிக எண்ணிக்கையில் கோழிகள் உயிரிழந்தால் அருகில் இருக்கும் கால்நடை நிலையங்களில் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.