Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! சூப்பர்…. “PS-1” வெற்றி கொண்டாட்டம்….. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

”பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் வெற்றியை அப்படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும்  இசைக்குழுவுடன் கொண்டாடி வருகின்றனர்.

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் 30- ஆம் தேதி வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தீபாவளியை முன்னிட்டு வெளியான “சர்தார் மற்றும் பிரின்ஸ்” திரைபடங்களை காட்டிலும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் மாஸ் குறையவே இல்லை. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானின் இசைக் குழுவுக்கு முக்கிய பங்கு உள்ளது.

எனவே இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக நேற்று இரவு சிறப்பான விருந்து அளித்து கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவில் “பொன்னியன் செல்வன்” திரைப்படத்தில் பணியாற்றிய இசை கலைஞர்கள் மற்றும் பின்னணி பாடகர்கள் என அனைவரும் கலந்துள்ளனர். இந்த விழாவில் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும்  பொன்னியின் செல்வன் திரைப்படம் 480 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |