Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கடவுளே.! எப்படியாச்சும் இந்தியா ஜெயிக்கனும்….. “பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை”…. காரணம் என்ன தெரியுமா?

சூப்பர் 12 சுற்றில் மீதமுள்ள தென்னாப்பிரிக்கா உட்பட 3 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர்.

8ஆவது ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என 12 அணிகள் மொத்தம் பங்கேற்று விளையாடி வருகிறது. இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 6ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும்.

இதற்கிடையே உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்ட பாகிஸ்தான அணி சூப்பர் 12 சுற்றில் முதல் போட்டியில் இந்தியாவிடம்  கடைசி வரை சென்று நூலிலையில் வெற்றியைகோட்டை விட்டது. அதன் பின் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியிலும் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்படி அடுத்தடுத்து அந்த அணி தோல்வியடைந்துள்ளதால் ஒரு புள்ளிகளையும் பெறாமல் புள்ளிபட்டியலில் 5ஆவது இடத்தில இருக்கிறது. இதனால் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது பாகிஸ்தான் அணி. அதே சமயத்தில் பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லவேண்டுமானால் இப்படி நடக்க வேண்டும்.
அதாவது, ஏற்கனவே சூப்பர் 12 சுற்றில் 2 போட்டிகளில் வென்று முதல் இடத்தில் இருக்கும் டேபிள் டாப்பரான இந்திய அணி வரக்கூடிய 3 போட்டியிலும் வெற்றி அடைய வேண்டும்.. அதேபோல தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற வேண்டும். ஜிம்பாப்வே அணி 2 போட்டிகளில் 3 புள்ளிகளையும், தென்னாபிரிக்க அணி 2 போட்டிகளில் 3 புள்ளிகளையும் பெற்றுள்ளது. இந்த இரு அணிகளும் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் ஆளுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இரு அணிகளும் சமமாக 3 புள்ளிகளுடன் இருக்கிறது. அதே நேரத்தில் பாகிஸ்தான் வரக்கூடிய 3 போட்டியிலும் அதிக ரன்ரேட்  அடிப்படையில் வெல்ல வேண்டும். அப்படி நடந்தால் பாகிஸ்தானுக்கு ஒரு கடைசி வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சூப்பர் 12 சுற்றில் மீதமுள்ள 3 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர்.எனவே பாகிஸ்தான் பிடி இப்போது இந்தியாவின் கையில் இருக்கிறது. அதனால் தான் சூப்பர் 12 சுற்றில் இந்தியா வரக்கூடிய மூன்று போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

இதற்கிடையே இன்று 3 போட்டிகள் நடைபெறுகிறது.. அதில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு பெர்த்  மைதானத்தில் மோதுகின்றன. முன்னதாக பிரிஸ்பேனில் இந்திய நேரப்படி இன்று காலை 8:30 மணிக்கு வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. மேலும் நெதர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி 12:30 மணிக்கு பெர்த் மைதானத்தில் அணிகள் மோதுகின்றன. இந்த 3 போட்டிகளுமே பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான போட்டி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

புள்ளிப்பட்டியல் குரூப் 2 :

Categories

Tech |