அக்டோபர் 30-ஆம் தேதி ஆன இன்று தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தி விழாவென்று நந்தனம் சந்திப்பில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக அதிக எண்ணிக்கையில் தன்னார்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வருவதுண்டு.
எனவே தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 7:00 மணி முதல் அண்ணா சாலை நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.