அனைத்து மொழிகளும் எனக்கு முக்கியம் தான் என்று பிரபல நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.
முதன்முதலாக தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கி இன்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் தீபிகா படுகோனே பல ஹிட்டுகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில் மீண்டும் தென்னிந்திய படங்களில் நீங்கள் நடிப்பீர்களா? என்று கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார். அதில்,
என்னைப் பொருத்தவரையில் அனைத்து மொழிகளும் எனக்கு ஒன்றுதான். அனைத்து மொழிகளுக்கும் நான் முக்கியத்துவம் அளிப்பேன். மொழி எனக்கு அவசியமில்லை. கதை அம்சம் தான் எனக்கு முக்கியம் கதை சிறப்பாக இருந்தால் எந்த மொழிகளில் வேண்டுமானாலும் நடிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இவரது இந்த பதிவை பார்க்கையில் மிக விரைவில் தென்னிந்திய படங்களில் நடிக்க அவர் முன் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.