குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு உரிமம் வழங்குவது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு உரிமம் வழங்குவதில்லை என்ற புகாரை முன்வைத்து காலவரையற்ற போராட்டத்தை குடிநீர் உரிமையாளர்கள் சங்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் சென்னையில் ஓரிரு நாள்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இது குறித்து தமிழக அரசு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில் குடிநீர் கடைகளுக்கு உரிமம் வழங்கப்படுவதில்லை என்ற புகார் முற்றிலும் பொய். SEMICRITIC மற்றும் NORMAL உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்படுவதாகவும், இது போன்ற இடங்களில் அனுமதியின்றி செயல்படும் ஆலைகளுக்கு மட்டுமே உயர்நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.