கோவையில் கார் வெடி விபத்து நடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு தகவல்களை கூறிய அண்ணாமலை கடந்த 18-ம் தேதி இந்திய உளவுத்துறை மூலம் மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரித்திருந்தது என்று தெரிவித்திருந்தார். இது குறித்து தமிழக காவல்துறை ஒரு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது அபத்தமான ஒன்று. மத்திய அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டது பொதுவான சுச்சரிக்கை. விபத்தில் என்னென்ன பொருட்கள் சேகரிக்கப் பட்டது என்பதை ஆய்வு செய்வதற்கு முன்பாகவே அண்ணாமலை விசாரணையை திசை திருப்புவதற்கு முயற்சி செய்கிறார் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தற்போது டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக காவல்துறை இன்று வெளியிட்டுள்ள பத்திரிகை செய்திகள் குறிப்பிடப்பட்ட ஒவ்வொன்றுக்கும் விரைவில் தகுந்த பதில் வழங்கப்படும். காவல்துறையில் பணிபுரியும் சகோதர சகோதரிகளின் மீது எங்களுக்கு பெரும் மதிப்பும், மரியாதையும் இருக்கிறது. ஆனால் காவல்துறை டிஜிபி மற்றும் உளவுத்துறை ஏடிஜிபி ஆகியோர் காவல்துறையினராக இல்லாமல் திமுகவினரை போல் செயல்படுகிறார்கள். காவல்துறை உயர் அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படாமல் ஆளும் திமுக அரசை மகிழ்விக்க மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை நாங்கள் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளுமே இரண்டு உயர் அதிகாரிகளுக்கு எதிராக மட்டுமே. ஆனால் அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள காவல்துறையிலிருந்து பொதுவான ஒரு பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளனர். காவல்துறையின் மாண்பை குறைத்ததாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எப்படி நடந்தது என்பதை ஆராய வேண்டும். பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல்துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார் என்று மக்கள் அறிவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
காவல்துறையின் மாண்பை குறைத்து விட்டதாக என் மீது குற்றச்சாட்டு சுமத்துவதற்கு பதிலாக இது போன்ற தீவிரவாத சம்பவங்கள் எவ்வாறு நடந்தது என்பதனை அவர்கள் ஆராய வேண்டும்.
பல பெருமைகளுக்கு பெயர் போன தமிழக காவல் துறையில் அரசியலைப் புகுத்தி சிறுமைப்படுத்துவது யார் என்று மக்கள் அறிவர். (4/4)
— K.Annamalai (@annamalai_k) October 29, 2022