தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ளது.தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கிய நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மற்றும் குமரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் இனி வரும் நாட்களில் நாளுக்கு நாள் மழை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.