சத்துணவில் அழுகிய முட்டை வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாக்கனூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 120 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் சத்துணவில் வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவ மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் விவரத்தை தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் வடிவேலு பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் மாணவர்களுக்கு புதிதாக முட்டைகள் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.