விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 9-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில், சாந்தி, ஜி.பி முத்து மற்றும் அசல் கோலார் ஆகியோர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற டாஸ்க் கொடுக்கப்பட்ட நிலையில் சக போட்டியாளர்களிடையே கடும் மோதல் மற்றும் சண்டைகள் நடைபெற்றது. அதன் பிறகு கமல்ஹாசன் ஒரு டாஸ்க் கொடுத்தார். அப்போது போட்டியாளர்களிடம் ஏதாவது ஒரு பொம்மையை எடுத்து உங்களுக்கு தோன்றும் விஷயத்தை கூறுங்கள் என்றார்.
உடனே ராபர்ட் மாஸ்டர் ஆயிஷாவின் பொம்மையை கையில் எடுத்து எனக்கும் என்னுடைய காதலிக்கும் இருக்கும் வயது வித்தியாசத்தை பற்றி நீங்கள் தயவு செய்து பேசாதீர்கள். காதலில் வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது என்று கூறினார். இந்நிலையில் கமல்ஹாசன் சென்ற பிறகு சக போட்டியாளர்களிடம் ராபர்ட் மாஸ்டர் மனம் திறந்து பேசினார்.
அதாவது என்னுடைய காதலிக்கு 22 வயது ஆகிறது. எனக்கு 44 வயது ஆகிறது. பெரியப்பா வயசில் இருந்து கொண்டு ஒரு பெண்ணை காதலிக்கிறார் என ஆயிஷா கூறினார். இதனால்தான் எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது என்று கூறினார். இதிலிருந்து ராபர்ட் மாஸ்டர் தான் சிங்கிள் என கூறியது பொய் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Robert Master to Ayesha#BiggBossTamil6 #BiggBoss #BiggBossTamil https://t.co/Gn5Wxvot0e
— Dr Kutty Siva (@drkuttysiva) October 29, 2022