Categories
சினிமா தமிழ் சினிமா

நவ.4 அல்லது 5ல்…. விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!!

இயக்குனர் வம்சியின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் வாரிசு. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இந்த நிலையில் ‘வாரிசு’திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. படத்திலிருந்து போஸ்டர்கள் மற்றும் ஸ்டில்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதனிடையே, தமன் இசையில் இப்படத்திற்கான அனைத்து பாடல்களும் முழுமையடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, படத்தின் முதல் பாடலை வரும் நவ.4 அல்லது 5ல் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |