Categories
உலக செய்திகள்

OMG: ஒரே நேரத்தில் 100 பேருக்கு Heart Attack….நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!!!

தென் கொரியாவின் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக கூடினர். அங்கு பெரிய அளவிலான மக்கள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பண்டிகையின் போது ஒரு குறுகிய தெருவில் முன்னோக்கி தள்ளப்பட்ட ஒரு பெரிய கூட்டத்தால் நசுக்கப்பட்டதில் சிக்கிய மக்களில் சுமார் 120 பேர் உயிரிழந்துள்ளதாக தென் கொரிய நாட்டை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே வேளையில், இந்த நெரிசலின் போது சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறுகலான தெருவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

Categories

Tech |