Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை கார்வெடிப்பு சம்பவம்… 3 கோவில்களை தகர்க்க சதித்திட்டம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து ஜமேசா முபினுடன் தொடர்பில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமீஷா முபின் வீட்டிலிருந்து 75 கிலோ வெடி மருந்து உட்பட 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் கோவையில் உள்ள மூன்று முக்கிய கோவில்களை தகர்க்க சதி செய்திருப்பது உட்பட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பலியான ஜமேஷா முபின் மற்றும் அவருடைய உறவினர்களான அசாருதீன், அப்சல் கான் போன்றோர் காந்தி பார்க்கில் இரண்டு கேஸ் சிலிண்டர்களும், உக்கடம் லாரி பேட்டை பகுதியில் 3 இரும்பு டிரம்களும் விலைக்கு வாங்கி சென்றுள்ளனர்.

அதற்கான ரசீதுகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர் மேலும் வெடி மருந்து போன்ற பொருட்களை ஆன்லைன் மூலமாக அப்சல்கான் வாங்கி கொடுத்திருக்கின்றார். இதனை அடுத்து அவர்கள் யூடியூபில் வெடிகுண்டு தயார் செய்வது எப்படி என்று பார்த்து அதை தயார் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதனை அடுத்து தங்களின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இடங்களை தேர்வு செய்துள்ளனர். அதன்படி ஜமேஷா முபின் வீட்டின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில், அதனை அடுத்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோனியம்மன் கோவில், 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புளியை குளம் முத்தி விநாயகர் கோவில் ஆகிய மூன்று கோவில்களை தற்கொலை படை தாக்குதல் நடத்த தேர்வு செய்திருக்கின்றனர்.

அங்கு தங்களின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒத்திகை பார்ப்பதற்காக பலமுறை சென்று நோட்டமிட்டு இருக்கின்றனர். இதனை அடுத்து முதலில் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து ஜமேஷா முபின் காரில் இரண்டு கேஸ் சிலிண்டர்கள் வெடி பொருட்களுடன் சென்று கேஸ் திறந்து விட்டு வெடிக்க செய்வது என முடிவு செய்திருக்கின்றனர். மேலும் அவர்கள் கோவில்கள் உள்ள பகுதிக்கு அடிக்கடி சென்று வந்த காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது அந்த வீடியோ காட்சி மற்றும் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை போலீசார் கைப்பற்றி என்ஐஏ அதிகாரிகளிடம் ஒப்படைத்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் ஜமேஷா முபின் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு வெடிகுண்டு தயாரிப்பதில் அனுபவம் இல்லாததால் அவர்களின் திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால் பெரிய அளவிலான உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் கோவை போலீஸ் அதிகாரி பேசும் போது தற்போது இந்த வழக்கில் 90 சதவீதம் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்திருக்கின்றோம் இதில் அசாருதீன், அப்சல்கான் போன்றோர் ஜமேசா முபினுடன் கூட்டு சேர்ந்து செயல்பட்டு இருக்கின்றார்கள். மேலும் ஜமேஷா முபின் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே வாடகைக்கு வீடு பார்த்து மூன்று மாதங்களாக தங்கி இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அடுத்த கட்ட விசாரணையை என்ஐஏ தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |