நடிகர் மஹத் ராகவேந்திரா நடிக்கும் “டபுள் எக்ஸ் எல்” இந்தி திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகர் அஜித் குமார் நடித்த “மங்காத்தா” திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் மஹத் ராகவேந்திரா. இதனை அடுத்து நடிகர் விஜய் நடித்த “ஜில்லா” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இயக்குனர் சத்ரம் ரமணி இயக்கத்தில் நடிகர் மஹத் “டபுள் எக்ஸ் எல்” திரைப்படத்தில் மூலமாக இந்தி மொழியில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இந்த பாலிவுட் திரைப்படத்தில் முன்னணி நட்சத்திரமாக சோனாக்க்ஷி சின்ஹா, ஹீமோ குரேஷி போன்றவர்கள் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் குறித்து நடிகர் மஹத் கூறியதாவது, “உலகில் அனைவரும் தன் உடல் மேல் நல்ல எண்ணம் இருக்கும் அளவிற்கு தான் அழகில்லை என்ற எண்ணத்தை உடைக்கும் அளவிற்கு மாறுபட்ட கதையுடன் இந்த படம் அமைந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ஜாகீர் இக்பால் என்ற மற்றொரு கதாநாயகனும் நடிக்கின்றார். இந்த “டபுள் எக்ஸ் எல்” திரைப்படம் நவம்பர் 4- ஆம் தேதி வெளியாகயுள்ளது.