பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது நெதர்லாந்து அணி.
டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ஸ்டீபன் மைபர்க் 6, மேக்ஸ் ஓ’டவுட் 0, என அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதனைத் தொடர்ந்து பாஸ் டி லீடே 6 ரன்னில் இருந்தபோது ஹாரிஸ் ரவுஃப் பந்துவீச்சில் வலது கண் கீழே பந்து பட்டு காயமடைந்ததால் அவர் ரிட்டையர் ஹட் ஆனார். அவருக்கு பதிலாக லோகன் வான் பீக் மாற்று வீரராக வந்தார். அதன்பின் டாம் கூப்பர் 0 என அனைத்து வீரர்களும் பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் வெளியேறினர்..
யாருமே பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. அதிகபட்சமாக கொலின் அக்கர்மேன் 27 ரன்களும், ஸ்காட் எட்வர்ட்ஸ் 15 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்தது நெதர்லாந்து அணி.
பாகிஸ்தான் அணியின் தரப்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சதாப் கான் 3 விக்கெட்டுகளும், முகமது வசீம் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். மேலும் ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து குறைந்த இலக்கை நோக்கி பாகிஸ்தான அணி களமிறங்கி ஆடி வருகிறது.