Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த ராணுவ வீரர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேவியோடு மாங்காலை பகுதியில் ஸ்ரீதரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அனூப்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இதில் அனூப்குமார் உத்தரகாண்ட் மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். பணியில் இருந்த போது திடீரென நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த குமாரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்து மருத்துவர்கள் குமார ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த குமாரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனை அடுத்து குமாரின் உடல் சொந்த ஊரான குமாரி மாவட்டம் மாங்காலைக்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் ராணுவ மரியாதையுடன் வீரரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. குமாரின் தந்தை ராணுவ வீரராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அவரது சகோதரர் அஜித்குமாரும் ராணுவ வீரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |