Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சித்தியை 2-வதாக திருமணம் செய்த தந்தை…. ஆத்திரத்தில் மகன்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கால் புதுப்பட்டி பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு சற்குண பாண்டி(24) புவனேஷ்குமார்(19) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா இறந்துவிட்டார். இதேபோல் ஜெயாவின் தங்கை பாண்டியம்மாள் என்பவரின் கணவரும் இறந்து விட்டார். இதனால் தனிமையில் இருந்த பாண்டியம்மாளும், பாண்டியும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டனர்.

இதனால் கோபமடைந்த சற்குண பாண்டியும், புவனேஷ்குமாரும் பாண்டியம்மாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து இரண்டு பேரும் அரிவாளால் பாண்டியை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனை தடுக்க வந்த பாண்டியம்மாளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் காயமடைந்த இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சற்குணபாண்டி, புவனேஷ்குமார் இருவரையும் கைது செய்தனர்.

Categories

Tech |