காணாமல் போன கல்லூரி மாணவியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பிராம்பட்டி பகுதியில் சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷர்மி(19) என்ற மகள் உள்ளார். இவர் திருச்சியில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற ஷர்மி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஷர்மியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சரவணகுமார் தனது மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஷர்மியை யாரேனும் கடத்தி சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.