தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 170-வது மற்றும் 171-வது திரைப்படத்திற்கு லைகா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார்.
இதில் 170-வது திரைப்படத்தை டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து தலைவர் 171-வது படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தற்போது லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2 திரைப்படத்தை சங்கர் இயக்குகிறார். இந்த படத்தை தொடர்ந்து தலைவர் ரஜினிகாந்தின் திரைப்படத்தையும் சங்கர்தான் இயக்கப் போவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும் ஒரு வேலை இயக்குனர் சங்கர் படத்தை இயக்கினால் கண்டிப்பாக படம் சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்