இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி இரு நாட்டு தூதரக உறவுகளை வலுப்படுத்துவதற்காக இந்தியாவிற்கு வர இருக்கின்றார் என மத்திய வெளிவகாரம் மந்திரி ஜெய்சங்கரி நேரில் சந்தித்து பேச இருக்கிறார் எனவும் இங்கிலாந்து வெளியுறவு அலுவலகம் கூறியுள்ளது. இதே போல் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பதவி ஏற்று கொண்ட அன்று மத்திய வெளிவகார மந்திரி ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு கிளெவர்லி பேசியுள்ளார். இது பற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் இடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
அதன் பின் இருவரும் பயங்கரவாத ஒழிப்பு, இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் உக்ரைன் மோதல் போன்றவை பற்றி ஆலோசனை மேற்கொண்டோம் வேறு விவரங்கள் எதனையும் பகிர்ந்து கொள்ளவில்லை என பதிவிட்டுள்ளார். இதன்படி இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் டெல்லிக்கு இன்று வந்து சேர்ந்த நிலையில் ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத ஒழிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின் கூட்டத்தில் அவர் என்று பேசும்போது சர்வதேச அளவிலான பயங்கரவாத ஆள்சேர்ப்பு பிரச்சாரங்கள் மற்றும் தாக்குதல்களை லைவாக வெளியிடுவது உள்ளிட்ட ஆன்லைன் வழியே என பயங்கரவாதத்திற்கு எதிராக போராட நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கின்றார். மேலும் இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசும்போது ரிஷியுடன் பணியாற்றுவது மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ரிஷி சுனக் சிறந்த பிரதமராக செயல்படுவார் என எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.